Sunday, 21 February 2016

நான் உருவாக்க விரும்பும் ஒரு விநோத மிதிவண்டி

நான் உருவாக்க விரும்பும் ஒரு விநோத மிதிவண்டி
மிதிவண்டியை அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், நான் ஒரு விநோத மிதிவண்டியை உருவாக்க விரும்புகிறேன். அம்மிதிவண்டியைப் பற்றி அனைவரும் பேசுவர். அம்மிதிவண்டிக்கு பல விநோததத் தன்மைகள் இருக்கும்.
நான் உருவாக்கும் மிதிவண்டிக்குப் பறக்கும் ஆற்றல் இருக்கும். அம்மிதிவண்டியைக் கொண்டு, நான் இந்த மலேசியத் திருநாடு முழுக்கும் பறந்து செல்வேன். அம்மிதிவண்டியின் மூலம், நம் நாட்டின் அழகிய காட்சிகளைக் கண்டு இரசிப்பேன்.
நான் உருவாக்கும் மிதிவண்டிக்கு உருமாறும் ஆற்றல் இருக்கும், அதனால், மிதிவண்டியை நிறுத்தி வைக்கும் பிரச்சினை ஏற்படாது. அதைச் சிறியதாக்கி என் சட்டைப் பையிலோ பென்சில் பெட்டியிலோ வைத்துக் கொள்வேன். அதனால், என் மிதிவண்டி களவு போகாமல் பாதுகாப்பாக இருக்கும்.
என் விநோத மிதிவண்டி அதீத விரைவாகச் செல்லும் வகையில் உருவாக்குவேன். அதன் மூலம், நான் விரும்பிய இடங்களுக்கு விரைவாகச் சென்று வருவேன். மேலும், அம்மிதிவண்டி மிதிக்காமலேயே ஓடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். அதனால், எவ்வளவு விரைவாகச் சென்றாலும் எனக்கு அசதி ஏற்படாது.
இன்னும் ஒரு மிக விநோதமான தன்மை கொண்ட மிதிவண்டியை நான் உருவாக்குவேன். அது என்னவென்றால், நான் உருவாக்கும் மிதிவண்டி நீர் மேல் ஓடும் தன்மை கொண்டிருக்கும். பினாங்கு, லங்காவி போன்ற எழில் கொஞ்சும் தீவிகளுக்குப் படகின் மூலமோ கப்பல் மூலமோ சென்று வராமல், என் மிதிவண்டி மூலமே சென்று வருவேன்.
இத்தகைய மிதிவண்டியை உருவாக்க நான் சிறந்து படிப்பேன். அறிவியல் பாடத்தில் கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாகி இம்மிதிவண்டியை உருவாக்குவேன்.

 

7 comments:

  1. Bro pls put naan uruvakka virumbum vinothe kudai

    ReplyDelete
  2. Poooyaaahh 🥱🥱🥱🥱🥱😡😡😡😡😡😡😡

    ReplyDelete
  3. Bro please write vinotha madikkanini

    ReplyDelete
  4. anne pls write vinothe mottar vandi
    and this is a good katturai

    ReplyDelete