நான் ஒரு பென்சில்.
சிறுவர் முதல் முதியவர் வரை என்னை எழுதப் பயன்படுத்துகிறார்கள். என்
பெயர் 2B. என்னைப்
பொதுவாக பென்சில் என்று குறிப்பிட்டாலும் எனக்குச் சிறப்பாகப் பல பெயர்கள் இருக்கின்றன. அவை
ஸ்தெட்லர், பைலெட்
போன்றவையாகும்.
நான் ஜெர்மனி நாட்டுத்
தொழிற்சாலை ஒன்றில் பிறந்தேன். என்னைப்
போலவே அயிரக்கணக்கானாவர்கள் அங்கே தயாராகி உலகெங்கிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நானும்
அங்கிருந்து கப்பல் வழியாக பினாங்குத் துறைமுகத்தை வந்தடைந்தேன்.
ஒரு வியாபாரி என்னையும் என் உடன் பிறப்புகளையும் வரவழைத்திருந்தார். எங்களை
அவரது கடைக்கே கொண்டு வந்து வாடிக்கையாளார்களிடம் பேரம் பேசி விற்று விட்டார்.மலாக்காவிலுள்ள ஒரு கடையில் பல நண்பர்களுடன் சேர்த்து விற்பனைக்கு வைத்துவிட்டார். பல இனத்தவர்கள் அன்றாடம் எங்களைப் பார்த்துப் பூரிப்படைவர்.
ஒரு நாள் திரு.சுரேஷ் என்னை வாங்கி தன் மகன் பாலாவிற்குப் பரிசாகக் கொடுத்தார். பாலா
என்னை மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்.ஒவ்வொரு நாளும் என்னைப் பயன்படுத்துவார். என்
பசிக்கு உணவாக அவ்வப்போது மை கொடுப்பார். ஒரு
நாள் சிவா கவனக் குறைவாக என்னைத் தன் மேசை மீது வைத்து விட்டு வெளியே சென்று விட்டார். அவ்வமையம்
தற்செயலாக அங்கு வந்த பாலாவின் தம்பி மேசை மீதிருந்த புத்தகத்தை எடுக்க முயன்ற போது நானும் அதோடு உருண்டு வந்து கீழே விழுந்தேன். அவ்வளவுதான்
என் உடம்பில் பல காயங்கள் ஏற்பட்டு நான் விகாரமாகக் காட்சியளித்தேன். பாலா
என்னைப் பார்த்து முகம் சுழித்தான். பெருமூச்சு
விட்டான். இன்னும்
அங்கேயே கேட்பாரற்றுக் கிடக்கின்றேன்.
No comments:
Post a Comment