Sunday, 21 February 2016

நான் ஒரு மூக்குக்கண்ணாடி

நான் ஒரு மூக்குக்கண்ணாடி
            நான் இப்பொழுது இந்தியாவின் சுதந்திர தந்தையின் நினைவாலையத்தில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் என் இருப்பிடத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். பல வருடங்களாக நான் என் எஜமானுக்குச் சேவையாற்றி வந்தேன். ஆனால், இப்பொழுது அவருடைய பிரிவு என்னை வெகுவாகப் பாதித்துவிட்டது.
           இரும்பாலும் கண்ணாடியாலும் செய்யப்பட்ட நான் மிகவும் விலையுயர்ந்தவன். என்னைச் செய்தவுடன் ஒரு கண்ணாடிப் பேழையில் வைத்தனர். ஒரு நாள் காலை பொழுது, தடி ஊன்றிய ஒரு வயதானவர் என் இருப்பிடத்திற்கு வந்தார். அவரைப் பார்த்து கடை முதலாளிநமஸ்தேஎன்று கூறினார். அவர் என்னை அணிந்ததும் அவர் பார்வை தெளிவானது. அவர் முதலாளியிடம் பணத்தைச் செலுத்தி விட்டு வீட்டிற்குத் திருப்பினார். எப்பொழுதும் அவரைச் சுற்றி நறைய பேர் இருந்தனர். அவரைக் காண மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். காலையில் இருந்து நள்ளிரவு வரை மக்களுக்குச் சேவை ஆற்றும் இந்த மனிதர் யாராக இருக்கும் என்று என் மனதில் பல கேள்விகள் எழுந்தன.
          அன்று இரவு அவர் உறங்கச் செல்லும் முன், என்னைக் கழற்றி மேசையின் மேல் வைத்துவிட்டு உறங்கினார். நானும் களைப்பில் கண்ணயர்ந்தேன்.
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதீர்த்த பாவன சீதா ராம்
என்ற பாடலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். என் எஜமான் பக்தர்களுடன் பூஜை செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு, கோயிலுக்குப் புறப்பட்டார். அவர் கோயிலை அடைந்ததும் மக்கள்சக்குடே காந்தி!” “சக்குடே காந்தி!” “சக்குடே காந்தி!” என்று ஆரவாரம் செய்தனர். அவர் கைகளை அசைத்த வண்ணம் நடந்தார். அப்பொழுதுதான் அவர் இந்திய தேசத்தின் சுதந்திர தந்தை மகாத்மா காந்தி என்று எனக்கு தெரிய வந்தது. என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனந்த்தில் நான் துள்ளி குதித்தேன். என் சந்தோசம், மகிழ்ச்சி, பூரிப்பு அதிக நேரம் நீடிக்கவில்லை.
         நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில்டுமீர்…!’ என்ற சத்தம் அவ்விடத்தையே அதிர செய்தது. என் எஜமான் கீழே விழுந்தார். ‘கோட்சாஎன்ற இளைஞன் அவரைச் சுட்டு விட்டான். உலகமே அவரின் மறைவைக் கண்டு கண்ணீர் வடித்தது. நானும் மனம் கலங்கினேன்.
       இந்திய மக்களுக்கு மகாத்மா சேவையாற்றினார் என்றால் நான் அவருக்குச் சேவையாற்றினேன் என்ற பெருமிதத்தில் இன்னும் வாழ்ந்து வருகிறேன்.








No comments:

Post a Comment