Thursday, 25 February 2016

வாசிப்பின் அவசியம்

 வாசிப்பின் அவசியம்
          பள்ளியில் தினமும் பலவிதமான படிக்கின்றோம். அவை அந்தந்தப் பாடங்கள் சம்பந்தப்பட்டவையாகும். இவற்றைப் படித்துவிட்டு நான் தினமும் படிக்கின்றேன் என்றால் தவறாகும். பள்ளிப் பாடங்கள் மட்டும் நம் அறிவை வளர்க்காது. பாடங்கள் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களைப் பெற நாம் வேறு பல நூல்களை வாசிக்க வேண்டியது அவசியமாகிறது.
         ஒரு மொழியில் புலமை பெற அம்மொழியில் வெளிவந்துள்ள பல புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிப்பதனால் அம்மொழியில் நாம் புலமை பெற முடியும். மொழி வளத்தைப் பெருக்கி கொள்ள முடியும். ஒரு மொழியில் உள்ள பல புதிய சொற்களை அறிய அம்மொழி நூல்களை வாசிக்க வேண்டும். அத்துடன் அவற்றின் பொருளை உணர்ந்து சரியான முறையில் பயன்படுத்தவும் வாசிப்பு அவசியமாகிறது.
        மொழி வளத்தைப் பெருக்கும் அதே வேளையில், பொது அறிவையும் வாசிப்பதன் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதால் அத்துறைகளைப் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள முடிகிறது. இடன் மூலன் நாம் தகவல் அறிந்த சமுதாயமாக மாற, வாசிப்பு துணைபுரிகிறது.
        இந்த நவீன உலகில் மனிதன் இயந்திரமாக வழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வியந்திர வாழ்க்கையிலிருந்து மீண்டு மனமகிழ்வு பெறவும் வாசிக்கும் பழக்கம் உதவுகிறது. கடை, கட்டுரை, கவிதை.,செய்யுள் போன்றவற்றை வாசிப்பதன் மூலம் அவற்றின் சுவையை உணர்ந்து இரசிப்பது மனம் மகிழ்கின்றது.
        சொந்தமாகக் கதை, கட்டுரை, கவிதை எழுத விரும்புகிறவர்கள் முதலில் அவை தொடர்பான பல நூல்களைப் படித்து அறிய வேண்டும். அப்போதுதான் சொந்தப் படைப்புகளைப் படைக்கும் போது அவை தரமானவையாக இருக்கும். பல தகவல்களைத் தன்னுடைய படைப்புகளில் புகுத்த முடியும்.
        எனவே, வாசிப்பு நமக்கு எவ்வளவு அவசியமாகிறது என்பதை அறிய முடிகிறது. ”நூலளவே ஆகுமாம் நுண்ணறிவுஎன்பதற்கேற்ப பல நூல்களை வாசித்து நம் அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.
  புறப்பாட நடவடிக்கை மாணவர் பருவத்தில் இன்றியமையாததாக விளங்குகின்றது. வகுப்பில் கல்வியைப் பயிலும் மாணவர்கள் வகுப்பிற்கு வெளியே மற்ற திறன்களைக் கைவரப் பெறுவதற்குப் பள்ளிப் புறப்பாட நடவடிக்கை பெரிதும் துணைபுரிகிறது.
   பள்ளிப்புறப்பாட நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபடுவதால், அவர்கள் அடையும் நன்மைகள் எண்ணிலடங்கா. சீருடை இயக்கங்களில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது. உதாரணமாக, கூடாரம் அமைத்தல், அணிவகுப்புப் பயிற்சி மற்றும் பிற நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ளும் பொழுது மாணவர்கள் பிறரை மதித்தல், ஒற்றுமை, கட்டொழுங்கு, தன்னம்பிக்கை, நாட்டின் மீது விசுவாசம், பிறர்பால் அன்பு செலுத்துதல் போன்ற நற்பண்புகள் மேலோங்கச் செய்கின்றது.மாணவர்கள் இவ்வாரான பண்புகளை கற்று, பின்பற்றும் பொழுது அவன் ஒரு சிறந்த நற்குடிமகனாகத் திகழச் செய்ய புறப்பாட நடவடிக்கை முக்கிய பங்காற்றுகின்றது.
       தொடர்ந்து, மொழிக்கழகங்களில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் அவர்கள் மொழியாற்றலை வளர்த்துக் கொள்வதுடன் தலைமைத்துவ பண்பும் மேலோங்குகிறது. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை என்பதற்கேற்ப மாணவர்களின் ஆற்றலை மேலும் ஊக்கப்படுத்த மொழிக்கழகங்கள் துணைப்புரிகின்றன. எடுத்துக்காட்டாக, மாணவர்கள் கழகங்களில் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் மொழியாற்றலை வெளிப்படுத்தவும், வளர்த்துக்கொள்ளவும் முடிகின்றது. அதுமற்றுமின்றி, மொழி கழகத்தில் ஒரு மாணவன் தலைவர் பொறுப்பு வகிக்கும் பொழுது அவனுள் தன்னொழுக்கம், கட்டளை இடுதல், கட்டொழுங்கைக் காத்தல், பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல் போன்ற பண்புகள் இணைந்தே வர வாய்ப்புண்டு.
    “ ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பாஎன அன்றே பாரதியார் பாடியுள்ளார். உடல் நலத்தைப் பேண விளையாட்டு ஒரு முக்கியமானதாக விளங்குகிறது. புறப்பாட நடவடிக்கையில் விளையாட்டில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களின் உடலை உறுதி செய்து கொள்ள முடிகிறது. ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி முக்கியம் என சிறு வயதிலிருந்தே மாணவர்களுக்கு வலியுறுத்தப்படுகின்றது. அதுமட்டுமின்றி, மாணவர்கள் நேரத்தை நல்வழியில் செலவிடவும், அவர்கள் விளையாட்டில் தங்களின் திறனை வெளிப்படுத்தவும் முடிகிறது. உதாரணமாக, நமது நாட்டு பூப்பந்து விளையாட்டு வீரர் டத்தோ லீ சொங் வே ஒரு நேர்காணலில் தனது இந்த வெற்றிக்குக்  காரணம் தனது சிறுவயதிலிருந்தே புறப்பாட நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுதான் எனக் கூறியுள்ளார்.
     ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவதில்  பள்ளிப் புறப்பாட நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கின்றது. நற்பண்புள்ளவனாகவும் , தன்னலம் கருதா மாந்தனாகவும் உருவாக பள்ளி புறபாட நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கின்றது.ஆகையால், ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் புறப்பாட நடவடிக்கையில் ஈடுபட்டு மேன்மை பெற வேண்டும்.


No comments:

Post a Comment