நான் உருவாக்க விரும்பும் அதிசய மிதிவண்டி
மனிதனாய் பிறந்த அனைவருக்கும் ஓர் ஆசை இருக்கும். அதே போல் எனக்கும் ஓர் சிறிய ஆசை உண்டு. அது என்னவென்றால் நான் விரும்பும் ஓர் அதிசய மிதிவண்டியை உருவாக்குவதுதான்.மிதிவண்டியை அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், நான் ஒரு விநோத மிதிவண்டியை உருவாக்க விரும்புகிறேன். அம்மிதிவண்டியைப் பற்றி அனைவரும் பேசுவர். அம்மிதிவண்டிக்கு பல விநோதத் தன்மைகள் இருக்கும்.
நான் உருவாக்கும் மிதிவண்டிக்குப் பறக்கும் ஆற்றல் இருக்கும். அம்மிதிவண்டியில் உள்ள விசையை அழுத்தினால் சுயமாக இரண்டு இறக்கைகள் வெளிவரும். அது அதிவேகமாக செல்லக்கூடியதாக இருக்கும். தேவைக்கேற்ப வேகத்தைக் குறைக்கவும், கூட்டவும் முடியும். அதனால், நெடுந்தூரப் பயணம் செய்ய முடியும். உதாரணத்திற்கு, அம்மிதிவண்டியைக் கொண்டு, நான் இந்த மலேசியத் திருநாடு முழவதும் பறந்து செல்வேன் மற்றும் ஸ்பேயின், ஜப்பான், இந்தியா, அமேரிக்கா, ரஸ்யா போன்ற நாடுகளை ஒரி வலம் வந்து உலக சாதனைப் படைப்பேன்.அம்மிதிவண்டியின் மூலம், நம் நாட்டின் அழகிய காட்சிகளைக் கண்டு இரசிப்பேன் அதோடு இம்மிதிவண்டியைக் கொண்டு விண்வெளிக்குச் செல்லும் எனது கனவை நினைவாக்கிக் கொள்வேன்.
அதுமட்டுமின்றி, எனது மிதிவண்டி கேட்கும் தன்மையும், பேசும் தன்மையுடையதாகவும் உருவாக்குவேன். இம்மிதிவண்டிக்கு “ஜிபிஎஸ்” எனும் கருவியே தேவையில்லை. நாம் செல்லவிருக்கு இடத்தை கூறினால் போதும், அதனை கிரகித்துக் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்குச் சுலபமாக கொண்டு சேர்த்துவிடும். உதராணமாக, நான் கோலாலம்பூரிலுள்ள ஜாலான் சுல்தான் இஸ்மாயிலுக்குச் செல்ல வேண்டுமென்றால் அதற்கேற்ப அவ்விடத்தைக் கிரகித்துக் கொண்டு செல்லும் வழியில் உள்ள இடத்தையும் , சரியான பாதையையும் நமக்கும் கூறிக்கொண்டே செல்லும். இதன் மூலம் நாம் செல்லும் வழியில் உள்ள அனைத்து இடத்தையும் தெரிந்துக் கொள்வதுடன் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய இடத்தையும் அடைய முடியும்.
அதிசயங்கள் நிறைந்திருக்கும் இம்மிதிவண்டியில் உருமாறும் சக்தியும் அடங்கியுள்ளது. அம்மிதிவண்டி செல்லக்கூடிய இடங்களை அறிந்து அதற்கேற்ப தன்னை உருமாற்றிக் கொள்ளும். இம்மிதிவண்டி வானத்திற்கு செல்லும் பொழுதும் , கடலுக்கடியில் செல்லும் பொழுதும் தன்னுடைய உடலை தேவைக்கேற்ப உருமாற்றிக் கொள்ளும்.உதாரணமாக,வானத்திற்கு செல்லும் போது இறக்கைகள் விரித்து பறந்து செல்லும் மற்றும் கடலுக்கடியில் செல்லும் போது சுற்றிலும் கண்ணாடிப் பேழையாக உருவெடுக்கும். அதனால், கடலுக்கடியில் உள்ள இயற்கைக் காட்சிகளையும் நாம் இரசிக்க முடியும்.
இம்மிதிவண்டி மறையும் தன்மை கொண்டதாக அமைந்திருக்கும். இக்காலகட்டங்களில் திருட்டிச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமாகவே இருக்கின்றன. ஆதலால், இத்தன்மையை உடைய இம்மிதிவண்டி தன்னை மறைத்து தற்காத்துக் கொள்ளும்.இத்தகைய மிதிவண்டியை உருவாக்க நான் சிறந்து படிப்பேன். அறிவியல் பாடத்தில் கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாகி இம்மிதிவண்டியை உருவாக்குவேன்.
012345678910
ReplyDelete